Viswasam Banner

Viswasam Banner : தல அஜித்தின் தூக்கு துரையின் அலப்பறைகளை கொண்டாட தியேட்டர்கள் தற்போதே களமிறங்க தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித், சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் நிச்சயம் வெளியாகும் என விஸ்வாசம் தயாரிப்பாளர் தியாகராஜன் அவர்கள் உறுதியளித்திருந்தார்.

இதனால் தியேட்டர்கள் படத்திற்கான பேனர் உருவாக்கும் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டர் என்ற பெயரில் பேனர் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த பேனரில் அடாவடி அலப்பறை, தடாலடி காட்டுஅடி என்ற வசனத்துடன் இடம் பெற்றுள்ளது. இதனை தல ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் தினத்தில் விஸ்வாசம் படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன் ஆகிய படங்கள் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

Viswasam