Viswasam Release Details

Viswasam Release Details : வெளியான புகைப்படத்தால் விஸ்வாசம் பட ரிலீஸ் தேதி தெரிய வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே தினத்தில் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படமும் ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்த நேரத்தில் பிரபல டிக்கெட் புக்கிங் இணையதளமான புக் மை டிக்கெட் இணையதளத்தில் விஸ்வாசம் படத்திற்கான முண்ணேட்டம் தொடங்கியுள்ளது.

அதில் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 10 முதல் என்பது போல் குறிப்பிட்டுள்ளது. இதனால் விஸ்வாசம் பட ரிலீஸ் இது தானோ என ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.

விரைவில் இது குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Viswasam Release

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here