பொத்தி பொத்தி வைத்த காதலை போட்டு உடைத்துள்ளார் விஜய் டிவி பிரபலம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் சிப்பிக்குள் முத்து. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தின் காரணமாக இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.

பொத்தி பொத்தி வைத்த காதலை போட்டு உடைத்த விஜய் டிவி பிரபலங்கள்.. அடுத்த ரியல் ஜோடி ரெடி - வைரலாகும் போட்டோஸ்

இந்த சீரியலில் இணைந்து நடித்து வந்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில் சீரியல் முடிந்ததும் இருவரும் தங்களது காதலை புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளனர்.

நிறை மாத நிலவே என்ற வெப் சீரிஸ் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்தா. அதைப்போல் விஷ்ணுகாந்த் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியல் உட்பட ஏற்கனவே பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.

பொத்தி பொத்தி வைத்த காதலை போட்டு உடைத்த விஜய் டிவி பிரபலங்கள்.. அடுத்த ரியல் ஜோடி ரெடி - வைரலாகும் போட்டோஸ்

தொடர்ந்து பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறிவரும் நிலையில் அடுத்ததாக இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இவர்கள் வெளியே போன புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.