
Vishnu Vishal Son : விஷ்ணு விஷால் தன்னுடைய மகனுடன் இருக்கும் கியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தற்போது சிலுகுவார்பட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் டிசம்பர் 21-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் தற்போது தன்னுடைய சுட்டி பையனுக்கு சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தின் பாடல் ஒன்றை போட்டு காட்டியுள்ளார்.
அதனை விஷ்ணு விஷாலின் மகனும் பார்வையை வேறெங்கும் திசை திருப்பாமல் உற்று பார்க்கிறான்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் செம கியூடாக இருக்க்கான் பையன் என கமென்ட்டடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க ஓவியா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
:):) #spsfromdec21 #silukkuvarpattisingam producer #ARYANRAMESH watchin #dioriodiya song 🙂 pic.twitter.com/sEpke2WRf2
— VISHNUU VISHAL – VV (@vishnuuvishal) December 18, 2018