அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளிய விஷால் திரைப்படம்.. டிஆர்பி ரிப்போர்ட் இதோ..!

Web Ads

அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது விஷாலின் திரைப்படம்.

Vishal's movie that pushed back Ajith's Vidaamuyarchi.. Here is the TRP report..!
Vishal’s movie that pushed back Ajith’s Vidaamuyarchi.. Here is the TRP report..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பு சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் விடா முயற்சி.

இந்தத் திரைப்படம் வெளியாகி சில மாதங்களே ஆன நிலையில் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில் அதனுடைய டிஆர்பி 6.86 மதிப்பை பெற்றிருந்தது.

ஆனால் நடிகர் விஷால் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான பூஜை திரைப்படம் மார்ச் மாதத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில் அதனுடைய டிஆர்பி 9.85 மதிப்பை பெற்றிருந்தது.

மேலும் இந்த திரைப்படம் 11 ஆண்டுகள் கடந்து பலமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் இந்த படத்திற்கு மக்களின் பேராதரவு கூடிக் கொண்டேதான் இருக்கிறது இதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதனால் விடாமுயற்சி படத்தை பின்னுக்குத் தள்ளி பூஜை திரைப்படம் டி ஆர் பி யில் மாஸ் காட்டியுள்ளது. இது மட்டும் இல்லாமல் சன் டிவியில் மார்ச் மாதம் ஒளிபரப்பான தாமிரபரணி திரைப்படமும் 4.55 டிஆர்பி மதிப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே நடிகர் விஷால் அவர்களின் படங்களுக்கு மக்களின் பேராதரவுடன் டிஆர்பி மதிப்பும் கூடிக் கொண்டே இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

இந்தப் பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Vishal's movie that pushed back Ajith's Vidaamuyarchi.. Here is the TRP report..!
Vishal’s movie that pushed back Ajith’s Vidaamuyarchi.. Here is the TRP report..!