நடிகர் சங்க பொதுச் செயலாளராக வெற்றி பெற்ற விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vishal Statement After Election Victory : தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கைக்கு தடைவிதித்து ஓட்டுகள் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தன.

நடிகர் சங்க பொதுச் செயலாளராக வெற்றி பெற்ற பிறகு விஷால் வெளியிட்ட அறிக்கை.. என்ன சொல்கிறார் பாருங்க.!!

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓட்டுக்களை எண்ணலாம் என உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று போட்டு எண்ணிக்கை சென்னையில் நடைபெற்றது. ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்து வந்த பாண்டவர் அணி போட்டியிட்ட அனைத்து பதவிகளையும் வென்றது.

பொதுச் செயலாளராக மீண்டும் விஷால் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மை வெல்லும் என்பது மீண்டும் உறுதியாகிவிட்டது. எனக்கு எப்போது நீதியின் மீது நம்பிக்கை உள்ளது. இந்த தேர்தலை நல்ல முறையில் நடத்திக் கொடுத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் சார் அவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

நடிகர் சங்க பொதுச் செயலாளராக வெற்றி பெற்ற பிறகு விஷால் வெளியிட்ட அறிக்கை.. என்ன சொல்கிறார் பாருங்க.!!

மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் தீயணைப்பு துறை மற்றும் தேர்தல் பணிகளுக்காக உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். கூடிய விரைவில் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.