நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து வெளியான வீடியோ வைரலாகி வருகிறது.

லத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்க எஸ் ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகி வரும் இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக் காட்சியின் போது பயங்கரமான விபத்து ஏற்பட்டது இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அதாவது, சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் இரவு நேரத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி வேகமாக வந்து கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து வைரலாகி வருகிறது.