Vishal Marriage

Vishal Marriage : நடிகர் விஷாலுக்கு திருமணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் விளங்கி வருபவர் விஷால். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் நடிகர் சங்க செயலாளராகவும் விளங்கி வருகிறார்.

38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த விஷால் நடிகை வரலட்சுமி சரத்குமாரை காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது விஷாலுக்கு ஆந்திராவை சேர்ந்த அனிகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல வரலக்ஷ்மிக்கும் திருமணம் என நேற்று தகவல் பரவியதால் இது குறித்து வரு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக ட்வீட் ஒன்றை பதிவு செய்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.