கண் முன் நடந்த கோர விபத்தை பார்த்த நடிகர் விஷால் மேனேஜர் செய்த உதவி பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமா நடிகராக வலம் வருபவர் விஷால் கிருஷ்ணா நல்ல நடிகராக தொடர்ந்து புரட்சிகரமான படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவரை போலவே அவருடைய மேனேஜர் புரட்சிகரமான விஷயத்தை நண்பர்களுடன் இணைந்து சாதுர்யமாக செய்துள்ளார்.

கண் முன் நடந்த கோர விபத்து.. விஷால் மேனேஜர் செய்த உதவி - இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா.?

விஷால் மேனேஜர் ஹரி அவர்கள் தன்னுடைய நண்பர்களுடன் புதுச்சேரி விஷால் ரசிகர் மன்ற தலைவரின் மகனின் பிறந்த நாளுக்காக சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு சென்னை திரும்பிய போது மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட கோர விபத்து ஒன்றை நேரில் பார்த்துள்ளனர். . பேருந்துடன் இரண்டு கார்கள் மோதி விபத்து ஏற்பட்டு சிலர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருக்க யாரும் அவர்களை கண்டு கொள்ளாமல் சென்று கொண்டு இருப்பதை பார்த்து அவர்களை ரத்தம் சொட்ட சொட்ட தங்களது காரில் அழைத்துச் சென்று மகாபலிபுரம் அருகே உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அங்கே மருத்துவர்கள் இது பெரிய விபத்து இங்கு சிகிச்சை பார்க்க முடியாது என கூறியுள்ளனர்.

ஆனால் விஷால் மேனேஜர் ஹரி உள்ளிட்டோர் மருத்துவர்களிடம் சண்டையிட்டு அவர்களுக்கு முதல் உதவி அளிக்க முயற்சி செய்து விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளனர்‌.

கண் முன் நடந்த கோர விபத்து.. விஷால் மேனேஜர் செய்த உதவி - இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா.?

அது மட்டுமல்லாமல் மற்ற கார் மற்றும் பேருந்தில் இருந்தவர்களையும் தனது நண்பர்களை வைத்து அந்த வழியாக வந்த வாகனங்களின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியுள்ளனர்.

கண்ணெதிரே நடக்கும் பல விபத்துகளை கண்டும் காணாமல் செல்லும் மக்கள் மத்தியில் நடிகர் விஷால் மேனேஜர் ஹரி அவர்களின் இந்த செயல் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.