மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவ களமிறங்கியுள்ளது விஷால் மக்கள் இயக்கம்.
மிக்சாங்க் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் பல்வேறு இடங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறது.
Vishal Makkal Iyakkam Helps in Chennai Flood : மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க தமிழக அரசு மட்டும் இன்றி தன்னார்வலர்கள், நடிகர்களின் ரசிகர்கள் என பலரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் விஷால் மக்கள் இயக்கம் சார்பாக திருவள்ளூர் மாவட்ட விஷால் ரசிகர்கள் மணலி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கி உள்ளனர்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் விஷால் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.