விஷால் 34 திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஷால் லத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரித்து வர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் விஷால் 34 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தினை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதத்தில் தொடங்க இருப்பதாகவும்
சொல்லப்பட்டு வரும் நிலையில் புதிய அப்டேட்டாக இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் உருவான பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைத்து கொடுத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படும் இந்த தகவல் தொடர்பான அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.