நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் திரை உலகை தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் லத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடித்து வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரிதுவர்மா நடிக்க எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

அதன் பிறகு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவையும் பதிவிட்டு இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வருகிற 27-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.