Virat Kohli Speech
Virat Kohli Speech

Virat Kohli Speech – ஆஸ்திரேலியா – இந்தியா இடையே நடந்து முடிந்த டி-20 போட்டி தொடர் சமனில் முடிந்தது.

அதனை தொடர்ந்து அடுத்ததாக வரும் 6-ஆம் தேதி நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க இருக்கின்றது.

சென்ற முறை இந்தியா ஆஸ்திரேலியாயுடன் விளையாடியதில் விராட் கோலி 4 சதம் மற்றும் 692 ரன்கள் எடுத்து, சராசரியை 86.50 என கொண்டுரிந்தார்.

மற்றும், அவர் எந்த ஒரு தொடர் போட்டிகளில் விளையாடும் போதும், வெளிநாடுகளுக்கு சென்று விளையாடும் போதும் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்கின்றார், அவர் மட்டும் இல்லாமல் அனைத்து வீரர்களும் அப்படிதான்.

விராட் கூறியது : ஆஸ்திரேலியா வந்த முதல் நாளை விட தற்போது அதிக நம்பிக்கையுடனே இருக்கின்றேன்.

மிக முக்கியமாக நான் இங்கு யாருக்கும் எதையும் நிரூபிக்க வரவில்லை, அதற்கான அவசியனும் இல்லை என்பதே எனது கருத்து.

என்னிடம் இந்திய அணி என்ன எதிர்பார்க்கின்றதோ அதனை செய்து முடிக்கவே முயல்கின்றேன், அதற்காக என்னுடைய முழு பங்களிப்பையும், 100 சதவீத திறமையையும் எல்லா போட்டிகளிலும் அளிக்கிறேன்.

இது மட்டும்தான் என்னுடைய அதிகபடியான செயல்பாடு. மற்றும் உள்நாட்டு, வெளிநாடு சென்று விளையாடுதல் என்ற எல்லா போட்டி தொட்ராகளிலும் எனக்கு இலக்கு ஒன்று தான்.

அது, சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டுவது மட்டுமே. அதை தான் நான் பின்பற்றுகிறேன்.

என்னுடைய தொடக்க கால கிரிக்கெடில், ஒரு குறிப்பிட்ட இலக்கை வைத்துக் கொண்டு அதை அடைய வேண்டும் என்றே இருந்தேன், ஆனால் இப்போது முழு கவனமும் அணியை வெற்றி பெற வைப்பதிலேயே இருக்கிறது. என்று கூறினார்.