தன்னை ஆன்ட்டி, குண்டு என்று கிண்டல் அடித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா.

தமிழ் சின்னத்திரை சீரியலில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் விஜே ஹரிப்பிரியா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவளே, கண்மணி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். அதையடுத்து
அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் தான் “எதிர்நீச்சல்”. இத்தொடரில் அப்பாவி மருமகளாக நந்தினி என்னும் கதாபாத்திரத்தில் ஹரிப்பிரியா சிறப்பாக நடித்து வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. ஆனாலும் சோர்ந்து போகாமல் சின்னத்திரை சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். முக்கியமாக இவர் தற்போது நடிக்கும் எதிர்நீச்சலில் நந்தினி கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக அவரிடம் இன்ஸ்ட்டாவில் லைவில் பேசுமாறு வேண்டுகோள் விடுத்த ரசிகர்களுக்காக ஹரிப்பிரியாவும் லைவில் உரையாடினார். அப்போது அவர்களிடம் தன்னை பற்றி பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் எதிர் நீச்சலில் தனக்கு கொடுத்த நந்தினி கதாபாத்திரத்தை குறித்து இயக்குனர் திருச்செல்வத்துக்கு நன்றி கூறினார். அதற்குப்பின் தன்னைப் பற்றி கமெண்டில் சிலர் குண்டு,ஆன்ட்டி என்று கலாய்த்து வருபவர்களுக்கு சரியான பதிலடியும் கொடுத்துள்ளார். அதாவது “ஆண்டியா இருந்தா தான் என்ன?. வயசு ஆகுறது இயற்கை. வயசு ஏறிட்டு போறத எப்படி தப்பா சொல்ல முடியும். எல்லாருக்குமே வயசு ஆகத்தான் செய்யும். “என்று கூறியுள்ளார்.

மேலும் ” எனக்கு காலில் அடிப்பட்டு இருக்கு, அதனால வொர்க் அவுட் செய்ய முடியாது. இங்கு ஒல்லி, சிவப்பு இதுதான் அழகு, கறுப்பு, குண்டு அழகு இல்லை அப்படியெல்லாம் இல்லை, எல்லாமே அழகு, எல்லோரும் அழகு ” என தெரிவித்துள்ளார். அதற்குப் பின்பும் ஒருவர் லைவில் ஆன்ட்டி என்று அழைத்ததற்கு ஹரிப்பிரியா அவரிடமே இளமையாக இருப்பதற்கு டிப்ஸ் கொடுங்கள் என்று கேட்டு நோஸ்கட் பண்ணி உள்ளார். இவரது இந்த சிறப்பான பதில்கள் தற்போது வைரலாகி வருகிறது.