விமானத்தில் செல்லும்போது சுந்தரி ஆக நடிக்கும் கேப்ரலாவிடம் பழனி கேரக்டரில் நடிக்கும் அருண்குமார் வம்பு இழுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேவரட் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் சீரியல் தான் சுந்தரி. இதில் சுந்தரி தாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கேப்ரலா முதலில் ‘கலக்கப் போவது யாரு’ என்ற விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து நடிகை கேப்ரலா தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது செய்து வரும் ரீல்ஸ் வீடியோஸ் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டே இருக்கும்.

அதேபோல் தற்போது சுந்தரி சீரியல் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது அதே சீரியலில் பழனி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்குமாரோடு இணைந்து விமானத்தில் ஒரு காமெடியான ரீல்ஸ் வீடியோவை செய்துள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.