ஹோட்டலில் கேண்டில் லைட் டிஷ்னரில் ஒன்றாக சாப்பிட்ட அமீர், பாவினியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவினி தற்போது பிரபல காதல் ஜோடியாக ரசிகர்களின் முன்பு திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இவர்கள் தற்போது பிபி ஜோடிகள் சீசன் 2வில் போட்டியாளராக நடனமாடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பாவினியிடம் பலமுறை தனது காதலை கூறியுள்ள அமீர் தற்போது பாவினியின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இதனாலேயே இந்த ஜோடி மீது அதிக ஆர்வத்தோடு இருக்கும் ரசிகர்கள் இவர்கள் எதை செய்தாலும் விரும்பி ரசித்து பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஹோட்டலில் கேண்டில் லைட் டின்னரில் ஒன்றாக சாப்பிட்டு வரும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.