வெளிநாட்டில் கச்சேரிக்காக சென்று இருக்கும் சிவாங்கி அங்கே சுற்றிப் பார்க்கும் பொழுது எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சூப்பர் சிங்கர்” என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இவர் தனது மழலை பேச்சால் பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” என்ற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கிறார்.

அதன்பின் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “டான்” படத்திலும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்னும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது சிவாங்கி கனடாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கச்சேரியில் பாடியுள்ளார். அந்த வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

மேலும் அங்கு அவர் ஊர் சுற்றியும் வருகிறார். அப்போது அங்கு உள்ள ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கும் ரயில் மீது ஏறி நின்று ‘தக்க தைய தையா’என்ற ஷாருக்கானின் பாடலுக்கு மிகுந்த உற்சாகத்துடன் நடனம் ஆடியுள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்து இருக்கிறார். அதனை கண்டு களித்த ரசிகர்கள் அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.