கரண் ஜோஹர் நடிகை சமந்தாவிடம் தொடர்ந்து நாக சைதன்யா குறித்த கேள்விகளை கேட்டு வந்ததால் கடுப்பான சமந்தா தடாலடியான பதிலை தந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான கரண் ஜோஹர் “காபி வித் கரண் ” என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் தற்போது சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமார் சமந்தாவை தூக்கி செல்வது மற்றும் நடனமாடுவது போன்ற காட்சிகள் எல்லாம் ப்ரோமோவாக வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவிடம் கரண் ஜோஹர், அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா குறித்த கேள்விகளை கேட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சமந்தா, ”வேண்டுமென்றால் எங்களை ஒரே அறையில் அடைத்து வையுங்கள். ஆனால் அங்கு கூர்மையான பொருட்கள் எதுவும் இருக்கக்கூடாது. இந்த பதில் போதுமா? என்று தடாள் அடியாக பேசியுள்ளார்.

இதன் மூலம் சமந்தாவின் கோபத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமந்தாவிற்கு இவ்வளவு கோபம் வருமா என்று அதிர்ச்சியுடன் கரண் ஜோஹருக்கு எதிரான கருத்துக்களை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருவதோடு மட்டுமின்றி இதனை வைரலாக்கி வருகின்றனர்.