ட்விட்டரில் அதிக ஃபாலோவர்ஸை பெற்று அல்லு அர்ஜுன் புதிய சாதனை செய்துள்ளார். அதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தெலுங்கில் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பிரபல முன்னணி நடிகர் தான் அல்லு அர்ஜுன். தெலுங்கில் அதிக ரசிகர்களை பெற்றுள்ள இவர் புஷ்பா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. அதேபோல் இப்படத்தில் கூடுதலாக ஒரு வில்லன் கதாபாத்திரம் சேர்க்கப்பட்டு அதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்திய மொழிகள் மட்டுமின்றி உலகின் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மொத்தம் 10 மொழிகளில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் அதிக அளவில் பின்தொடர்பாளர்களை வைத்திருக்கும் தெலுங்கு நடிகர்களின் பட்டியலில் 7 மில்லியன் ரசிகர்களை பெற்று இரண்டாவது இடத்தை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில் அனைவருக்கும் நன்றி கூறி பதிவிட்டிருக்கிறார். தற்போது இவரது இந்த சாதனையை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.