‘ஏகே 62’திரைப்படத்தை இயக்க இருக்கும் விக்னேஷ் சிவனுக்கு லைக்கா நிறுவனம் கொடுத்திருக்கும் நெருக்கடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 வது படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை தொடர்ந்த அஜித்குமார் விக்னேஷ் சிவன் இயக்கம் இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நயன்தாரா ஜோடியாக நடிக்க இருக்கிறார். அவ்வப்போது இப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவியான நயன்தாராவுடன் இரண்டாவது முறையாக தேன் நிலவிற்கு சென்று உல்லாசமாக இருக்கிறார். இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்தைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் மனைவியுடன் ஊர் சுற்றி கொண்டிருக்கும் விக்னேஷ் சிவனுக்கு இப்படத்தை தயாரிக்க இருக்கும் லைக்கா நிறுவனம் முழு கதையையும் விரைவில் தங்களிடம் சொல்ல வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது திணறிக் கொண்டிருக்கிறார். இந்த பரபரப்பான தகவல் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.