படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நாசர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தான் நாசர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் செயலாற்றிவருகிறார்.

பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் சினிமா துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார். இந்நிலையில் தெலங்கானாவில் உள்ள போலீஸ் அகாடமியில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் நாசர் கலந்துகொண்டார்.

அப்பொழுது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது, அவர் நலமாக உள்ளார் என்றும் விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.