பத்திரிக்கையாளர்களிடம் மோசமாக நடந்து கொண்ட விஜய் தேவர் கொண்டா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவர் கொண்ட தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் ‘லைகர்’. இப்படத்தில் விஜய் தேவர் கொண்ட உடன் இணைந்து அனன்யா பாண்டே, பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் இப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இதனால் இப்படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக விஜய் தேவர் கொண்டாவும், அனன்யா பாண்டேவும் பிஸியாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்த ‘லைகர்’ பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, பத்திரிகையாளர் ஒருவர், ”டாக்ஸிவாலா’ படம் வெளியானபோது என்னால் உங்களிடம் எளிதாக பேச முடிந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை” என்றார். அதைக்கேட்டதும் விஜய் தேவரகொண்டா அங்கிருந்த டேபிளின் மீது காலை வைத்து, ‘ஃப்ரீயாக பேசுங்கள்” என்றார். அவருடைய இந்த அணுகுமுறை சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டு பலரும் இதனை மீம்களாக்கி வைரலாக்கினர்.

இதனால் சர்ச்சையில் சிக்கிக்கொண்ட விஜய் தேவர்கொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ”தங்கள் துறைகளில் வளர முயற்சிக்கும் ஒவ்வொருவரின் முதுகுக்கு பின்னாலும் ஒரு இலக்கு எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும். நாம் அதனை எதிர்த்து போராட வேண்டும். உங்களுக்கு நீங்கள் நேர்மையாகவும், மற்றவர்களுக்கு சிறந்ததையும் விரும்பும்போது, மக்கள் மற்றும் கடவுளின் அன்பு உங்களைப் பாதுகாக்கும்” என்று பதிவிட்டுள்ளார். அதேநேரம் இன்னொரு பதிவில் தனது புகைப்படத்தை பதிவிட்டு ‘என்ன நடக்கிறது என்று யோசிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.