பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வினுஷா தேவி ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஆரம்பம் முதலில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த நிலையில் அதன் பிறகு பாரதி கண்ணம்மா இருவரும் பிரிந்து டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் போர் அடிக்க தொடங்கியது.

முதல் முறையாக ரசிகர்கள் எப்போது இந்த சீரியலை முடிப்பீங்க என கேட்க தொடங்கியது இந்த சீரியலுக்குத்தான் என சொல்லும் அளவுக்கு ரசிகர்களை சலிப்படைய செய்தது.

மேலும் நாயகியாக நடித்து வந்த ரோஷினி ஹரி பிரியன் சீரியலில் இருந்து விலகியது அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடிக்க ஒப்பந்தமானார். ஆரம்பத்தில் ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொள்ள தயங்கிய நிலையில் பிறகு இவரும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர தொடங்கினார்.

இந்த நிலையில் தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படியான நேரத்தில் வினுஷா தேவி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆமாம் இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க ஒரு எபிசோடுக்கு இருபதாயிரம் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.