கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் வேஸ்டட் பாடலின் வீடியோ வெளியானது.

கோலிவுட் திரையுலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகி மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த சூப்பரான ஆக்சன் படமான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்திருந்த வேஸ்டட் என்னும் பாடலின் வீடியோ வெர்ஷன் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு இப்பாடலின் லிரிக்ஸ் வீடியோ மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் நீண்ட மாதங்களுக்குப் பிறகு இப்பாடலின் வீடியோவை சோனி மியூசிக் வெளியிட்டுள்ளது. இதனால் மிகுந்த உற்சாகமடைந்த ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.

YouTube video