கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் கிளைமாக்சில் வரும் பாடலின் வீடியோவை படகுழு வெளியிட்டுள்ளது. அதனை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

கடந்த மாதம் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்திருக்கும் படம் தான் “விக்ரம்”. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர்.

ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்து 50 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் அனிருத்தின் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் விக்ரம்’ படத்தின் பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விக்ரம் படத்தின் கிளைமேக்ஸில் வரும் ‘ஒன்ஸ் அப்பான் ஏ டைம்’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் அவரே பாடியுள்ள இந்த பாடலின் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

YouTube video