நேற்றைய தினம் “விக்ரம்” படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை உற்சாகத்துடன் ரசிகர்கள் கண்டுக்களித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் என பல திரையுலக முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் மேலும் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக இப்படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழு “டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்” மூலம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்தோடு கண்டுக்களித்து வருவதோடு மட்டுமில்லாமல் தங்களுக்கு பிடித்த சீன்களின் மேக்கிங் வீடியோவை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.