பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. முதல் ப்ரோமோ வீடியோவில் கொடுக்கப்பட்டு இருந்த டாஸ்கால் சண்டை போட்டு கொண்டனர்.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் ரித்விகா ஐஸ்வர்யா சிரிப்பு தான் அழகு, அது கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு என கூறியுள்ளார். அதே போல் யாஷிகா ரித்விகாவின் நேர்மையை புகழ்ந்து பேசியுள்ளார்.

இதனையடுத்து பேசிய விஜி தமிழ் பொண்ணுனு சொன்னா மட்டும் போதாது, இதே தமிழ் பொண்ணுங்க தான் வீரத்தையும் காட்டியுள்ளார்கள் என கூறி ஜனனி, ரித்விகாவை சுட்டி காட்டியுள்ளார். இது ஜனனி, ரித்விகா ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.