Vijay WIth Pibhasa Basu Photos

சச்சின் திரைப்படத்திற்காக பிரபல நடிகர் ஒருவருடன் விஜய் மிக நெருக்கமாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Vijay With Bipasha Basu Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழ் சினிமாவில் தன்னுடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் உதவியுடன் தான் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். பல மோசமான விமர்சனங்களை சந்தித்து அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் இன்று தனக்கென ஒரு தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று சச்சின். ஜான் மகேந்திரன் இயக்கத்தில் காதல் திரைப் படமாக வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. குறிப்பாக விஜய்யின் குறும்புத்தனமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதேபோல் படத்தின் வெற்றிக்கு வைகைப்புயல் வடிவேலு காமெடியும் மிக முக்கியம் என்பது மறுக்கமுடியாத ஒன்று. இதுவரை ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ரசிக்கும் படங்களில் ஒன்றாக சச்சின் திரைப்படம் இருந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்து இருப்பார். அவருக்கு முன்னதாக இப்படத்தில் பிபாஷா பாசு என்பவர் தான் நடிக்க இருந்துள்ளார். இதற்காக தளபதி விஜய் அந்த நடிகையுடன் சேர்ந்து நெருக்கமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.