![Vijay Wishes to Thangam Team Vijay Wishes to Thangam Team](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2020/12/unnamed-5-696x315.jpg)
டேய் நீ இப்படியெல்லாம் நடிப்பியா டா என தங்கம் படத்தைப் பார்த்த தளபதி விஜய் சாந்தனுவுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Vijay Wishes to Thangam Team : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான சுதா கொங்கரா மணிரத்னம் வெற்றிமாறன் மற்றும் விக்னேஷ் சிவன் என நால்வரின் இயக்கத்தின் நான்கு பகுதிகள் இணைத்து பாவ கதைகள் என்ற பெயரில் வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த படத்தின் ஒரு பகுதி என தங்கம் என்ற பகுதியை சுதா கொங்கரா இயக்க சாந்தனு மற்றும் காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2020/12/Paava-Kadhaigal-on-Netflix_-All-Eyes-Are-on-Sudha-Kongara-1024x768.jpg)
இவர்கள் இருவரின் நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப் பட்டு வந்தது. இப்படியான நிலையில் தற்போது தளபதி விஜய் தங்கம் பகுதியைப் பார்த்துவிட்டு நடிகர் சாந்தனுவுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டேய் நீ இப்படி எல்லாம் நடிப்பியாடா என அவரை பாராட்டி தள்ளியுள்ளார். அதுமட்டுமல்லாமல் படத்தை சிறப்பாக இயக்கியிருந்த சுதா கொங்கராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த காளிதாஸ் அவர்களுக்கும் தளபதி விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.