விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்களின் காமெடியான ரீல்ஸ் வீடியோ வைரல்.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக திகழ்ந்து கொண்டிருக்கும் சேனல் தான் விஜய் தொலைக்காட்சி. மக்களின் பேவரைட் தொலைக்காட்சி சேனலான இந்த சேனலில் பணியாற்றி வரும் பல பிரபலங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றனர்.

இவர்கள் செய்யும் அல்டிமேட்டான காமெடிகள் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ட்ரெண்டிங் ஆகி வரும். அந்த வகையில் தற்போது இந்த தொலைக்காட்சி சேனலில் பிரபல தொகுப்பாளர்களாக இருக்கும் பிரியங்கா ,மாகாபா ஆனந்த் மற்றும் DJ பிளாக், பென்னி ஆகியோர் இணைந்து நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் மாஸ் பாடலான அரபிக் குத்துப் பாடலுக்கு செம்ம காமெடியாக டான்ஸ் ஆடி ரிலீஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது ரசிகர்களின் மத்தியில் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.