மீனா கலங்கி நிற்கும் நிலையில் போதையில் வீட்டுக்கு வருகிறார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி என இருவரும் பார்ட்டிக்கு செல்ல அங்கு நடக்கும் போட்டிகளில் இருவரும் கணவன் மனைவியாக பங்கேற்று அடுத்தடுத்து வெற்றி பெறுகின்றனர். கடினமான போட்டிகளில் இருவரும் நெருக்கமாக நின்று வெற்றி பெறுகின்றனர்.

மறுபக்கம் வீட்டுக்கு வந்த மீனா முத்து உடன் சென்ற இடத்தில் நடந்த விஷயங்களை நினைத்து அழுது கொண்டு இருக்கிறார். குடிபோதையில் வீட்டுக்கு வரும் முத்து அவரது அப்பா தூங்காமல் உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஏன்பா இன்னும் தூங்காம இருக்க என கேட்க உன்னை மாதிரி ஒரு புள்ளையை பெற்று வச்சிட்டு எப்படி நான் நிம்மதியா தூங்குறது என வருத்தப்பட முத்து ஏன் பா இப்படி பேசுற என கேட்கிறார்.

நீயும் மீனாவும் ஒண்ணா தானே போனீங்க மீனா மட்டும் எதுக்கு தனியா வந்தாள்? அங்க என்ன நடந்துச்சு என கேட்க முத்து அவ என்ன அசிங்கப்படுத்திட்டு வந்துட்டா என சொல்ல அங்கு என்ன நடந்திருக்கும் என்று எனக்கு நீ சொல்லாமலேயே தெரியும். உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்துட்டா நல்ல வாழ்க்கை வாழ வழிய பாரு என அறிவுரை சொல்லிவிட்டு ரூமுக்குள் எழுந்து சென்று விடுகிறார்.

உள்ளே வரும் முத்து மீனா படுத்து தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து இவ மட்டும் நிம்மதியா தூங்கிட்டு இருக்கா என புலம்பி அங்கிருக்கும் தண்ணீர் டிபனை திறக்க போக அது சிதறி மீனாவின் முகத்தில் விழுந்து அவர் பதறி எழுந்து கொள்கிறார். என்னத்த கொட்டுனீங்க தண்ணியா இல்ல வாந்தி எடுத்தீர்களா என மீனா கேட்க வாந்தி எல்லாம் எடுக்க மாட்டேன் எவ்வளவு குடித்தாலும் ஸ்டெடியா இருப்பேன். தண்ணி திறக்கும் போது தவறி விழுந்துடுச்சு ரொம்ப பண்ணாம படுத்து தூங்கு என சொல்ல மீனா பாத்ரூம் சென்று முகத்தை அலம்பி கொண்டு வருகிறார்.

பிறகு முத்து மீனாவிடம் பேச எதுவும் பேச வேண்டாம் நான் எதுவும் கேட்கவும் தயாராக இல்லை பேசவும் தயாரா இல்லை என சொல்லி அங்கிருந்து நகர்கிறார்.

மறுநாள் காலையில் மீனா எழுந்து கோலம் போட்டுக் கொண்டிருக்கும் போது நடந்த விஷயங்களை நினைத்து பார்த்துக் கொண்டிருக்க அங்கு வரும் முத்துவின் அப்பா அண்ணாமலை மீனாவிடம் பேச மீனா என் வாழ்க்கை இப்படியா இருந்துமா என எனக்கு தெரியல என வருத்தப்படுகிறார்.

உனக்கு ஆறுதல் சொல்றதா இல்ல நம்பிக்கையை கொடுக்கறதா என எனக்கு தெரியல என அவரும் வருத்தப்படுகிறார். சரிங்க மாமா நீங்க வாக்கிங் போயிட்டு வாங்க நான் அதுக்குள்ள காபி போட்டு வைக்கிறேன் அத்தையும் எழுந்துருவாங்க காபி கொடுக்கணும் அவருக்கு துணிமணி எடுத்து கொடுக்கணும் எனக்கு வேலை இருக்கு என சொல்ல அண்ணாமலை எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.

இதையெல்லாம் ஒட்டு கேட்ட விஜயா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.