தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக திகழ்ந்து வருபவர் புகழேந்தி பொதுவாக புகழ் என்று அழைக்கப்படுபவர், ஸ்டார் விஜய்யின் குக்கு வித் கோமாளி என்ற நகைச்சுவை சமையல் போட்டியில் தோன்றி பெரும் புகழ் பெற்றார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றியைப் பெற்றார், இதன் விளைவாக தமிழ் படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. அவர் 2019-ல் வெளிவந்த சிக்ஸர் என்ற படத்தில் அறிமுகமானார், பின்னர் காக்டெய்ல், சபாபதி, எதர்க்கும் மற்றும் வலிமை போன்ற பல படங்களில் நடித்தார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்றதும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் ஆவார்.

இந்த நிலையில் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் புகழ் தற்போது அவரின் தாய் பிறந்தநாளை முன்னீட்டு தாயுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் அதற்கு ரசிகர்கள் லைக் செய்து வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,