Maari 2 Release date

Maari 2 Release Date : தனுஷ் நடித்து வரும் மாரி 2 படத்தை பிரபல தொலைக்காட்சி சேனல் கைப்பற்றி இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா மற்றும் பலர் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாரி-2.

சமீபத்தில் தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தன.

அதே போல் சாய் பல்லவியின் கெட்டப் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஸ்டேடிலைட் உரிமையை விஜய் டிவி நிறுவனம் பிரம்மாண்ட விலைக்கு வாங்கியுள்ளது.

மேலும் இப்படம் வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் இதனை தனுஷ் ரசிகர்கள் #Maari2WithVijayTV மற்றும் #MAARI2FromDec21 ஆகிய ஹேஸ்டேக்குகளுடன் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.