
ஈஸ்வரி எடுத்த முடிவால் ஒரே கேள்வியில் அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாக்கியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபி வீட்டுக்கு வந்திருக்கும் நிலையில் பாக்யா என்ன செய்வது என தெரியாமல் வருத்தமாக உட்கார்ந்து இருக்க ஜெனி, அமிர்தா என இருவரும் ஆறுதல் கூறுகின்றனர்.

இந்த நேரத்தில் அங்கு வரும் ராமமூர்த்தி பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டு இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவன் இங்கே இருக்கட்டும் நாளைக்கு கிளம்பி போயிடுவான் என சொல்ல பாக்கியா எனக்கு பிரச்சனை இல்லை என சொல்கிறார். திரும்பவும் கோபியா நீயா என என்ற சூழ்நிலை வந்தால் நாங்க எல்லாரும் உன் பக்கம் தான் நிற்போம் என சொல்லி ஆறுதல் கூறுகிறார்.

அதற்கு அடுத்ததாக ராதிகா விடியற்காலை 3.30 மணி வரை கோபியை எதிர்பார்த்து தூங்காமல் காத்துக் கொண்டிருக்க தூக்கத்திலிருந்து எழுந்து வரும் அவரது அம்மா ராதிகாவுக்கு ஆறுதல் சொல்கிறார். மறுநாள் காலையில் ராதிகா கோபியை தேடி வெளியே வந்து பார்க்க அவரது கார் பாக்யா வீட்டின் அருகே நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

உடனே வீட்டுக்குள் செல்லும் ராதிகா அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு, எது நடக்க கூடாது என்று நினைச்சேனோ அது நடந்துருச்சு என அம்மாவிடம் கோபி பாக்யா வீட்டில் இருக்கும் விஷயத்தை சொல்ல அவர் அது எப்படி உன்னை கல்யாணம் பண்ணிட்டு அங்க போக முடியும் அப்படி எல்லாம் போக முடியாது என பேசுகிறார்.
ராதிகா அதான் போயிட்டாரே அவங்க அம்மா பேசும்போது இவர் அமைதியா இருக்கும்போது எனக்கு சந்தேகம் வந்தது இப்போ கிளம்பி போயிட்டார். இனி நான் என்ன பண்றது என் வாழ்க்கை அவ்வளவுதானா என அழுது புலம்ப என் பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டு அப்படியே விட்டுட்டு போனா நான் சும்மா இருப்பேனா இதற்கு ஒரு வழி பண்றேன். நீ ஒன்னும் கவலைப்படாதே என்று ராதிகாவின் அம்மா கூறுகிறார்.

விடிந்ததும் செழியன் மற்றும் ஈஸ்வரி என இருவரும் கோபியை பற்றி பேசிக்கொண்டிருக்க அப்போது வரும் எழில் இன்னும் எதுக்கு அவர வச்சுக்கிட்டு இருக்கீங்க எழுப்பி அனுப்ப வேண்டியது தானே என சொல்ல ஈஸ்வரி இப்ப சொல்றேன் கேட்டுக்கோ இனி கோபி இங்கதான் இருப்பான் பழைய கோபியா இங்கே தான் இருப்பான் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ராமமூர்த்தி அவன் உன்கிட்ட சொன்னானா என கேட்க அவன் சொல்லுவான் நான் சொன்னா கண்டிப்பாக கேட்பான். இனிமே இங்கதான் இருப்பான் என சொல்ல கிச்சனிலிருந்து வெளியே வரும் பாக்கியா அப்போ நான் என்ன பண்ணனும் அத்தை என கேள்வி கேட்கிறார்.

இனிமே அவர் இங்கே தான் இருப்பார்னா நான் என்ன பண்ணனும் அதையும் நீங்களே சொல்லிடுங்க. நான் இந்த வீட்டை விட்டு போயிடனுமா என கேட்க ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.