தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சர்கார் மற்றும் பேட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

கடனந்த அக்டோபர் 2-ம் தேதி பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியவை அனைத்தும் முருகதாஸும் விஜயும் திட்டமிட்டு பேசியவை, இது கலாநிதி மாறனுக்கே தெரியாது என பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருந்தார்.

அதன் பின்னர் விஜய் முருகதாஸின் இந்த செயலால் கலாநிதி மாறன் கடும் அப்செட்டிற்கு ஆளாகினாராம், இதனால் இனி நடக்க உள்ள பேட்ட இசை வெளியீட்டு விழாவில் என்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் எதுவும் பேச கூடாது என கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டாராம்.

கலாநிதி மாறனின் இந்த முடிவால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.