தளபதி விஜய்யின் தம்பியை விடவும் தளபதி மகனுக்கு சம்பளம், பல மடங்கு அதிகம்..
தளபதி விஜய்க்கு, இயக்குனர் அட்லி தெறி, பிகில், மெர்சல் என மூன்று ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்து, அவருக்குப் பிடித்தமான தம்பி ஆனார்.
தற்போது, தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தான் இயக்கும் முதல் படத்திற்கு அட்லியை விடவும் அதிக சம்பளம் பெற்றிருக்கிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்..
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியான பிறகு, இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன்,
‘இது முழுக்க முழுக்க ஆக்ஷனும் ஃபன்னும் கலந்த ஒரு எண்டர்டெய்னர் மூவி. சுமார் 50 நிமிடங்கள் இந்த திரைப்படத்தை பற்றி என்னிடம் விரிவாக ஜேசன் விலக்கியது என்னை பிரமிக்க வைத்தது. அவர் மிகச் சிறந்த இயக்குனராக மாறவிருக்கிறார் என்பதை அவருடைய கதை சொல்லும் விதமே எனக்கு தெரிவித்தது.
‘பான் இந்தியா’ அளவில் இந்த திரைப்படம் இருக்கும், அவருடைய முதல் படத்தில் நான் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்வரும் 2025-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
ஒரு இயக்குனராக தன்னை மெருகேற்றி உள்ள ஜேசன் சஞ்சய், மிகச் சிறந்த திரைப்படத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது’ என்றார். இப்படத்திற்கு, தமன் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், ஜேசன் சஞ்சய்க்கு லைகா நிறுவனம் ரூ.10 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கமாக புதுமுக இயக்குனர் என்றால், அவர்களுக்கு கோடிகளில் சம்பளம் வழங்கப்படுவது அபூர்வம். ஆனால், ஜேசன் சஞ்சய்க்கு முதல் படத்திலேயே 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ள தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விஜய் மகன் என்பதால், அவருக்கு இந்த அளவு சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
அவ்வகையில், பாலிவுட்டில் தற்போது சல்மான்கானை வைத்து இயக்கும் அட்லி 100 ரூபாய் சம்பளமாக பெறுகிறார். இவர் இயக்கிய முதல் படமான ‘ராஜா ராணி’ படத்துக்கு வாங்கிய சம்பளத்தை விட, ஜேசனுக்கு பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.