விஜயை பார்த்து வாயில் சிகரெட்டுடன் இளம் பெண் செய்த வேலை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானது. இதில் விஜய் வாயில் சிகரெட் வைத்துக் கொண்டு இருந்தது சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் தற்போது விஜயை போல இளம்பெண் ஒருவர் வாயில் சிகரெட்டுடன் நான் வரவா பாடலுக்கு நடனமாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களுக்கு தவறான முன் உதாரணமாக இருப்பதாக காஞ்சிபுரம் மேற்கு பாமக இந்த வீடியோவை வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.