அஜித்தா விஷயத்தில் விஜய் அப்படி பண்ணி இருக்கக் கூடாது.. சரத்குமார் பேச்சு.!!

அஜித்தா விஷயத்தில் விஜய் அப்படி பண்ணி இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார் சரத்குமார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எச் வினோத் இயக்கத்திலும் கே.வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் சரத்குமார் இடம் அஜித்தா என்ற பெண்மணி விஜய் காரை மரித்த சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு விஜய் அப்படி செய்திருக்கக் கூடாது மனிதாபிமானம் அடிப்படையில் இறங்கி வந்து பேசி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் அவங்க தூக்க மாத்திரை சாப்பிட்டாங்கன்னு கேள்விப்பட்டிருந்தேன் இறங்கி வந்து இரண்டு வார்த்தை பேசி இருந்தால் எல்லாமே சரியாய் போயிருக்கும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

