அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தின் ஒன்லைனர் கேட்டு அசந்து போன விஜய் சேதுபதி குறித்த தகவல் வைரல்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் தல அஜித் குமார் மூன்றாவது முறையாக இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தல அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இப்படம் பற்றின சுவாரசியமான தகவல் ஒன்றை நடிகர் விஜய் சேதுபதி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், படத்தின் ஒன்லைனர் ஸ்டோரியை விக்னேஷ் சிவன் தன்னிடம் கூறினார் மிகவும் சுவாரசியமாக இருந்தது. நான் அதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். இவர் பகிர்ந்து உள்ள இந்த சூப்பரான தகவலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.