sanga tamizhan
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

Vijay sethupathi Sangathamizhan trailer video – விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இதுவரை வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் சேதுபதி இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளை செய்யும் மசாலா ஹீரோவாக நடித்துள்ளார்.

கதையே இல்லாத படத்தை ஓட வைக்க விஜய் இப்படி பேசுகிறார் – பொங்கும் அதிமுகவினர்

இப்படத்தில் சூரி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரில் காதல் காட்சிகளும், அதிரடி சண்டை காட்சிகளும், விஜய் சேதுபதி பஞ்ச் வசனங்கள் பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படம் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ:

YouTube video