
கமிட்டான வேகத்தில் முக்கிய படத்தில் இருந்து வெளியேறி உள்ளார் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களிலும் நடிப்பில் மிரட்டி வரும் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் சந்தானம் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

இப்படியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாகவும் இதற்கு தேதி ஒதுக்க முடியாத காரணத்தினால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களை செய்துள்ளது.