Vijay Sethupathi in Vairamuthu Biopic Movie

கவிஞர் வைரமுத்துவின் பயோபிக் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi in Vairamuthu Biopic Movie : தமிழ் திரையுலகில் பிரபல கவிஞர் மற்றும் பாடலாசிரியராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி வைரமுத்து வேடத்தில் நடிக்கப்போகிறார் என்று தகவல் கசிந்துள்ளது.

தற்போது ஜி ஆர் கோபிநாத், நம்பி நாராயணன், ஜெயலலிதா இவர்களுக்கும் பயோபிக் படத்தை இயக்கியுள்ளனர்.

தற்போது கவிஞர் வைரமுத்துவின் பயோபிக் படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரே கூறியது குறிப்பிடத்தக்கது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.