‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி..

Web Ads

சூர்யா நடித்து வெளியான ‘கங்குவா’ படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் படமென்ன என்பது தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக பல்வேறு தகவல்களும் வெளியாகின.

தற்போது விஜய் சேதுபதியை சந்தித்து கதையொன்றை கூறியிருக்கிறார் சிவா. இப்படத்தினை சிவா அடுத்து இயக்க இருப்பதாகவும், அதற்காக திரைக்கதையினை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது இறுதி திரைக்கதை வடிவத்தினை விஜய் சேதுபதியிடம் கூறியவுடன், இப்படம் அடுத்த கட்டத்துக்கு நகரும் என தெரிகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் எதுவுமே முடிவாகவில்லை. ‘அண்ணாத்த’ மற்றும் ‘கங்குவா’ ஆகிய படங்களின் தோல்வியினால் சிவா தனது அடுத்த படத்துக்கு பெரும் நேரத்தினை எடுத்து உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Web Ad 2

‘கங்குவா’ படத்துக்குப் பிறகு அஜித் படத்தினை இயக்கவிருந்தார் சிவா. ஆனால், அப்படத்தின் தோல்வியினால் அஜித்-சிவா கூட்டணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வீரம், வேதாளம், விவேகம், மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்-சிவா கூட்டணி இணைந்து பணிபுரிந்திருப்பது நினைவுகூரத்தக்கது.

vijay sethupathi in director siruthai siva direction
vijay sethupathi in director siruthai siva direction