ஜவான் படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி உறுதி செய்துள்ளார். அதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

கோலிவுட் திரை வட்டாரத்தில் முன்னணி இயக்குனராக திகழும் அட்லி பாலிவுட்டில் முதல் படமாக ஷாருக்கான் வைத்து ஜவான் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் அண்மையில் வைரலாக பரவி வந்தது. அது உண்மையா பொய்யா என்று ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில் ஜவான் படத்தில் நடிப்பதை தற்போது விஜய் சேதுபதி உறுதி செய்துள்ளார்.

அதாவது சமீபத்தில் அனிருத், விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரசிகர்களுடன் கலந்துரையாடிய விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர், நீங்கள் ஜவான் படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, கண்டிப்பாக என ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.