திரிஷாவுடன் லிப் லாக் காட்சிக்கு நோ சொல்லி படத்தின் ஹிட்டுக்கு காரணமாகி உள்ளார் விஜய் சேதுபதி. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 96. 

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா என இருவரும் கடைசிவரை ஒருவர் தொடாமலேயே தங்களது காதலை வெளிப்படுத்தி இருந்தனர். 

இதுதான் இந்த படத்தில் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. ஆனால் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு முத்த காட்சி இருந்தது. அதை நான் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். கடைசி வரை தொடாமலேயே கதை இருக்கட்டும் என்று சொன்னதாக விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.