நடிகர் விஜய் கில்லி படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் பொங்கலுக்கு வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தெலுகு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது தளபதி விஜய் ஒரு படத்திற்கு ரூபாய் 120 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இப்படி என்ன நிலையில் தரணி இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியான கில்லி படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தளபதி விஜய் வளர்ந்து வந்த சமயத்தில் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த இந்த கில்லி படத்திற்கு அவர் பெரும் நான்கு கோடி ரூபாய் தான் சம்பளமாக வாங்கியுள்ளார். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.