படப்பிடிப்பு முடிவடைந்ததால் மீண்டும் சென்னை திரும்பிய விஜயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் மும்பரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கொண்டிருந்தது. தற்போது அங்கு நடிகர் விஜய் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டதால், அவர் சென்னைக்கு திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விஜயின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.