
ரசிகர்களுக்கு தளபதி விஜய் கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் தளபதி விஜய். படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் அடுத்த சட்டமன்றத் தேர்தல் எப்போது அரசியலில் இறங்க இருப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல விஜயின் தொடர் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்.
அந்த வகையில் பத்து பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி அவர்களுக்கு பரிசு கொடுக்க உள்ளார் விஜய். இதற்காக நாளை நீலாங்கரையில் மிகப்பெரிய பிரம்மாண்ட பங்க்ஷன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கிட்டத்தட்ட 6000 மாணவர்களை சந்தித்து பாராட்ட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வரும் நிலையில் இதை ரசிகர்களுக்கு கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார். அதாவது இந்த நிகழ்ச்சி குறித்து கட் அவுட், பேனர் என எதையும் வைக்க கூடாது என சொல்லி உள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் தளபதியின் உத்தரவை ஏற்று கட் அவுட், பேனர் வைக்காமல் அதற்கு மாற்றாக சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
