தமிழகத்தில் முக்கிய அரசியல் தலைவர்களாக இருந்து வந்தவர்கள் செல்வி ஜெ.ஜெயலலிதா மற்றும் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு திரையுலக பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முழு நேர அரசியலில் இறங்கியுள்ளனர்.

தளபதி விஜயும் விரைவில் அரசியலில் நுழைவார் என எதிர்பார்க்கப்டுகிறது. சர்கார் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் பேசிய பேச்சு அரசியலுக்கு அச்சாரம் போடுவது போல இருந்ததாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து கேட்டதற்கு தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல கருத்தை கூறியுள்ளார்.