வீடு திரும்பிய அஜித்திற்கு போன் போட்டு நடந்து விசாரித்துள்ளார் தளபதி விஜய்.
Vijay Phone Call to Ajith Kumar : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். விடாமுயற்சி படத்தின் பிஸியாக நடித்து வந்த இவர் பழக்கமான உடல்நல பரிசோதனைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த பரிசோதனையின் போது இவருக்கு காது அருகே நரம்பு வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அதனை சரி செய்தனர்.
அதன் பிறகு அஜித் வீடு திரும்பிய நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழகம் அரசியல் தலைவருமான தளபதி விஜய் அஜித்துக்கு போன் போட்டு நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
திரை உலகில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தாலும் இருவரும் தொடர்ந்து நல்ல நட்பை கைவிடாமல் இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.